சைவம் மற்றும் வைணவம் – கி.பி 800 – கி.பி.1100
வைணவர்களின் தமிழ் வேதமான நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்களைக் கண்டெடுத்து தொகுத்தருளிய வைணவத்தின் முதல் ஆச்சார்யரான நாதமுனிகள் அவதரித்த வீர நாராயணபுரம் தான் காட்டுமன்னார்கோயில் (காட்டுமன்னார்குடி), அதுபோல் சைவ வேதமான தேவாரம் அளித்த நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூர், காட்டுமன்னார்கோயில் அருகே (5 கி.மீ ) தொலைவில் உள்ளது.

சைவம் வைணவம் நூல்களான தேவாரமும் நாலாயிர திவ்ய பிரபந்தமும் இம்மனிலிருந்தே உலகிற்கு அருளப்பட்டது. வைணவ முதல் ஆச்சார்யரான நாதமுனிகள், வைணவ ஆச்சார்யர் ஆளவந்தார் சைவமும் நம்பியாண்டார் நம்பி, அனந்தீஸ்வர திருக்கோயில், வீரநாரயன திருக்கோயில் மற்றும் பிற பாடல் பெற்ற திருத்தலங்கள் இவ்வூரின் சிறப்பு
சோழ பேரரசில் காட்டுமன்னார்கோயில் (உடையார்குடி) -கி.பி.900 – கி.பி.1100, பொன்னியின் செல்வன் கடந்த பாதை
காவேரி டெல்டாவின் கடைமடையின் வடக்கு எல்லை வீராணம் ஏரியில் நிறைவுபெறுகிறது, இதனை ஒட்டிய நீர்ப்பாசன பகுதிகள், கீழணை பகுதிகளாகும், இவைகளையும் சேர்த்துதான் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது, காட்டுமன்னார்கோயில் , சிதம்பரம் , புவனகிரி தாலுக்காக்கள் பாதுகாக்க பட்ட வேளாண்மண்டத்திலும், காவேரிடெல்டா பகுதியிலும் வரும். ராஜேந்திர சோழன் தலைநகராக கொண்ட கங்கைக்கொண்ட சோழபுரம் கீழணைக்கு மேல் (மேற்கு ) பகுதியில் அமைந்துள்ளது, கொள்ளிட வெள்ளத்திலிருந்து தப்புவிக்க இங்கே தலைநகரை கட்டி இருக்கலாம், இது காட்டுமன்னார்கோயிலிலிருந்து 15 கி.மீ.தொலைவில் உள்ளது.

ராஜா ராஜ சோழனின் பெரிய பாட்டி பெரிய பாட்டி செம்பியன் மாதேவி வழிபட்ட திருக்கோயில்
பராந்தக சோழனும் வீராண எரியும்
பொன்னியின் செல்வன் சில குறிப்புகள் : உடையார்குடி கல்வெட்டு
வீரமாமுனிவர் வருகையும் – தமிழகத்தில் மிகப்பெரிய அரபு கல்லூரியும் – கி.பி.1500 – கி.பி. 2000
சைவம் வைணம் மட்டுமல்ல, கிறிஸ்தவ இஸ்லாம் மதமும் இம்மண்ணில் தழைத்துள்ளது,
பரத நாட்டியத்தில் “காட்டுமன்னார்கோயில் பாணி” , பரத நாட்டிய குரு
காட்டுமன்னார்கோயில் அருகே வீரமாமுனிவரின் சேவை
தமிழகத்தில் பெரிய அரபு கல்லூரி (வேலூருக்கு அடுத்து ) 1864ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, ஆற்காட்டு நவாப் கீழ் , லால்கான் அவர்களால் 1775ல் உருவாக்கப்பட்ட நகரமே லால்பேட்டை.
சமுதாயமுன்னேற்ற பெரியவர் இளையபெருமாள் அவர்களின் சேவை, மேலும் இவர் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்