பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

தமிழர் வரலாற்றைச் சற்றே திரும்பிபார்க்கையில்,மிகப்பெரும் நிகழ்வுகள் காட்டுமன்னார்குடி எனும் காட்டுமன்னார்கோயில்-இல் நிகழ்ந்துள்ளதை காணமுடிகிறது.

சைவம் மற்றும் வைணவம்   (   கி.பி  8 முதல் 11 ஆம் நூற்றாண்டு)

வைணவர்களின் தமிழ்வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைக் கண்டெடுத்துத் தொகுத்தருளிய வைணவத்தின் முதல் ஆச்சார்யரான நாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார்கோயிலுக்கு அருகாமையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது, சைவர்களின் தமிழ்வேதமான தேவாரத்தைத் தொகுத்தருளிய நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூர் உள்ளது.

இந்து மதத்தின் சைவம் வைணவம் எனும் இருபெரும் பிரிவுகளின் வேதங்களான தேவாரம் மற்றும் நாலாயிர திவ்வியப்பிரபந்தம் இம்மண்ணைச்சார்ந்தவர்களே தொகுத்து இவ்வுலகுக்கு அளித்துள்ளனர். இவற்றை தனித்தனியே கீழே பார்ப்போம்.

சோழ பேரரசில் காட்டுமன்னார்குடி எனும் காட்டுமன்னார்கோயில் ( கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டு )

காட்டுமன்னார்கோயில் நிலபரப்பு காவிரியாற்றின் வடக்கு கடைமடை பகுதியான கொள்ளிடக்கரையின் வடக்கு கரையில் அமைந்துள்ளது, மேலும் ராஜேந்திர சோழன் தலைநகராக கொண்ட கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

காட்டுமன்னார்கோயில் (17 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை)

சமுதாய முன்னேற்ற சிந்தனையுடன் உள்ள பெரியோர்களும் 17-19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளனர், அவர்களையும் மேலும் அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் பார்ப்போம்,

இருபதாம் நூற்றாண்டின் நாயகர்களை இன்றைய நகரம் தலைப்பில் காணலாம்...