பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

வணக்கம்! காட்டுமன்னார்கோயில்!!

காட்டுமன்னார்குடி மற்றும் மன்னார்குடி என்றும் அழைக்கப்படும் காட்டுமன்னார்கோயில், இந்திய துனைக் கண்டத்தில், தமிழ் நாடு மாநிலத்தில், கடலூர் மாவட்டத்தில், ஒரு வருவாய் வட்டத் தலைநகராக உள்ளது. காட்டுமன்னார்கோயில் நகர பஞ்சாயத்து 1892 ஆம் ஆண்டு ஆங்கிலே ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது, குடியரசு இந்தியாவில், இன்று காட்டுமன்னார்கோயில் வட்டம் 161 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

அமைவிடம்

மாவட்ட தலைநகர் கடலூர் 75 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகர் சென்னை 220 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (தே.நெ.எண் 227), சிதம்பரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்கே 8 கி.மீ. தொலைவில் அரியலூர்(60 கி.மீ.) மாவட்டமும்,அம்மாவட்ட ஜெயம்கொண்டம் நகரம் 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தெற்கே கொள்ளிடக்கரை 10 கி.மீ. தொலைவிலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் மூலம் திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை - சென்னை பயணத்தூரம் மற்றும் பயண நேரம் குறையும்.